அன்பு அண்ணனின் பிரிவு

ஒருவரின் மரணத்தை பற்றி கையாலாகாத்தனம்,முட்டாள்தனம் என்று யார் வேண்டுமானாலும் எழுதலாம் பேசலாம் நாம் அந்த வலியை சந்திக்காதவரை ஏன் சாய் அண்ணாவும் மரணத்தை பற்றி எழுதியிருக்காங்க தானும் அந்த வலியை சந்திக்கபோவது தெரியாமல்.

நம்பிக்கை துரோகிகளை உடன் வைத்திருந்தால் ஒருவரின் வாழ்க்கை என்னவாகும் என்பதற்க்கு உதாரணம் சாய் அண்ணாவின் வாழ்க்கை. அந்த மரணம் தானாக வந்ததா அல்லது   உறவுகள், நண்பர்கள் என்று கூடவே இருந்து குழிபரித்த சில நம்பிக்கை தூரோகிகளால் வரவைக்கப்பட்டதா என்பது சாய் அண்ணாவை முழுமையாக அறிந்தவர்களுக்கு தெரியும். அவர் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால் அதில் கஷ்டங்களும் துன்பங்களும் தான் அதிகம் என்பது கூடவே இருந்து அவர் பட்டகஷ்டங்களை அனுபவித்தவள் என்ற முறையில் எனக்கும் இன்னும் சிலருக்கும் தான் தெரியும்.

தற்கொலை செய்யவேண்டும் என்று நினைத்திருந்தால் 5 ஆண்டுகளுக்கு முன்பு செய்து இருக்க வேண்டும் ஆனால் அனைத்து கஷ்டங்களை போராடி வெல்லப்போகிற நேரத்தில் காரணம் இல்லாமல் தற்கொலை செய்தார் என்று மற்றவர்கள் கூறும்போது வேதனையிலும் சிரிக்கத் தோன்றுகிறது.

அன்பு பாசம் மற்றவர்களுக்கு உதவுவது இரக்ககுணம் இப்படி அனைத்து நல்ல குணங்களையும் கொண்ட அவருக்கு அந்த குணம் தான் அவர் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை அடைய காரணமாக அமைந்தது. இரக்கப்பட்டு சில உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அவர் உதவியது தான் இந்த முடிவுக்கு காரணம்.

பாத்திரம் அறிந்து பிச்சை போடவேண்டும் என்பது பணத்திற்க்கு மட்டும் அல்ல அன்பு பாசம் இரக்ககுணம் அனைத்திற்க்கும் பொருந்தும் அதை மறந்து பிச்சை இட்டால் நம்மை அனைத்திலும் பிச்சைகாரனாக்கிவிடும்.

சாய் அண்ணா நம்மை விட்டு பிரிந்து சென்றார் என்பதை இங்கு நான் அறிவிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை அண்ணா எப்போதும் என்னுடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் சாய் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று வேண்டி அவரின் ஆசை, கனவு, லட்சியங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பு தங்கை……………………………………………….

Island Top – Short Term Pattern (Bearish)

இடைவெளி நிரப்பப்பட்டது 🙂  

அனைவருக்கும் வணக்கம் –  நீண்ட ஒரு இடைவெளிக்கு பிறகு பதிவு எழுத துவங்குகிறேன். ,   

ஏற்கனவே நமது பழைய பதிவுகளில் ஐஸ்லாண்ட் டாப் / பாட்டம் அமைப்புகளை பற்றி எழுதியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். 

தற்போதைய நிப்டி சார்ட்டில் “ஐஸ்லாண்ட் டாப்” அமைப்பு உருவாகியுள்ளது,  படம் மேலே.   

5060  வரை மேலே சென்று இந்த இடைவெளி நிரப்பப்படாத வரை இந்த அமைப்பின் தாக்கம் இருக்கும்.   

நமது முந்தைய பதிவு –

http://wp.me/pd3Xh-iR

இந்த அமைப்பு பற்றிய மேலதிக விவரங்களுக்கு –

http://www.trending123.com/patterns/island_reversal.html

 

 

==============================================================================

தற்போதைய சந்தையின் போக்கு சர்வதேச சந்தை நிலவரங்களால் வழி நடத்தப்படுவதை நாம் நன்கறிவோம்.   

  இதற்கு முந்தைய பதிவுகளில் “டவ்ஜோன்ஸ் மற்றும் எஸ் அன்ட் பி”  சார்ட்களை பார்த்தோம், அவற்றின் தற்போதைய நிலை என்ன்?

முக்கியமான சப்போர்ட் நிலைகள் என்று பார்த்த 10930 மற்றும் 1080 நிலைகளை உடைத்து கீழிறங்கி  அடுத்த வலுவான சப்போர்ட் நிலைகளில் புயல் சின்னம் போல் நிலை கொண்டுள்ளது.  இந்நிலைகள் உடைபட்டால் பெரிய அளவில் சரிவுகளை சந்திக்க நேரிடும்.  மாறாக இந்நிலைகள் தக்கவைத்தால் ஏற்றமடையலாம்.

12.05.2010

5145 – 5163 – 5197 – 5214 – 5239 

5112 – 5090 – 5070 – 5045

நேற்றைய தினம் நமது எதிர் பார்ப்புக்கு மாறாக – கீழ் நிலையாக குறிப்பிட்ட 5190 வில் துவங்கி கீழே சென்றது. 

தற்போதைய நிலையில் 5090 முக்கிய சப்போர்ட் நிலையாகவும்,    மேல் நிலைகளில் 5225 – 5245 ஆகிய நிலைகள் தடை நிலையாகவும்   நீடிக்கும்.  

 

11.05.2010

நேற்றைய பதிவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல் எதிர் திசையில் சென்றது வாரத்தில் எதிர்பார்த்த 5260 நிலைக்கு மிக அருகில் சென்றுள்ளது. இன்று அந்நிலையை அடைந்திடும் என்று எதிர் பார்க்கிறேன்.

அதே நேரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  5245 – 5260 நிலைகளில் ஒரு செல்லிங் பிரசர் உருவாகலாம்.   

 இன்றைய முக்கிய நிலைகள்.

5225 – 5240 – 5260 – 5276 – 5292

5190 – 5172 – 5155

May 10th – 14th 2010

//நிப்டியை பொறுத்தவரை வலுவான சப்போர்ட் நிலைகளான  5200 – 5160-5100   உடைபட்டால்  5010-4925  வரை கீழிறங்கலாம்.//

சென்ற வாரம் எதிர்பார்ப்புகளையொட்டியே நகர்வுகள் அமைந்தது. 

கடந்த வியாழன் அன்று அம்பானி சகோதரர்களின் வழக்கின்  முடிவை  எதிர்பார்த்தே 5090 நிலையில் சந்தை முடிவுற்றது.   ஆனால் அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட  யாரும் எதிர்பாராத வீழ்ச்சி மற்றும் எழுச்சியை அடுத்து நமது சந்தையும் கேப்-டவுனாக துவங்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.

தற்போதைய நிலையில் அனைவரது எதிர்பார்ப்பும் பெரிய அளவிளான சரிவு…   ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக சில ஆச்சரியங்கள் நடைபெறலாம்.

டெக்னிகல் பார்வையில்   சந்தை பலவீனமான நிலையில் இருந்தாலும் – காளைகள் ஒரே  நா ளில் தங்களது ஒரு வருடத்திற்கும் மேலான  தொடர் ஓட்டத்தினை முடிவுக்கு கொண்டு வரமாட்டார்கள்.    இறுதியாக ஒரு பெரு முயற்சி எடுக்கலாம்,  மேல் நிலைகளை உடைக்க.   பார்ப்போம்.

இன்றைய சப்போர்ட் நிலை – 4980 

இந்த வாரத்திற்கான சப்போர்ட் நிலை   – 4950 – 4920

இன்றைய தடை நிலை –  5075 

இந்த வாரத்திற்கான தடை நிலை – 5150.     இந்நிலை உடை பட்டால்  5260 வரை மேலே செல்லும் வாய்ப்புகள் உள்ளது.

 

 

இன்றைய சந்தையின் போக்கு 3.05.2010

கடந்த இரு வாராங்களாக நிப்டியின் போக்கில் பெரிய மற்றம் இல்லை 5300 நிலைககளை கடந்தாலும், 5360-5400 வலுவான தடை நிலையாக தொடர்வதால்.   தொடரும் தடுமாற்றம். 

வங்கித்துறை பங்குகளின் உற்சாகத்தால்/உதவியால் சந்தை மேல் நிலைகளில் தன்னை நிலைப்படுத்திவருகிறது. 

 (பேங்க் நிப்டியின் வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது..  காரணம் Lot Size   25 ஆக குறைப்பட்டுள்ளது.)    

நிப்டியை பொறுத்தவரை வலுவான சப்போர்ட் நிலைகளான  5200 – 5160-5100   உடைபட்டால்  5010-4925  வரை கீழிறங்கலாம்.

சர்வதேச சந்தைகளில் ஒரு தேக்க நிலை உருவாகியுள்ளது.  டவ்ஜோன்ஸ் மற்றும் எஸ் அண்ட் பி ஆகியவை முக்கியமான் சப்போர்ட் நிலைகளில் நிலைகொண்டுள்ளது. இவற்றின் அடுத்தகட்ட நகர்வின் தாக்கம் நமது சந்தையிலும் இருக்கும்.

 

இன்றையதினம் சர்வதேச சந்தைகளின் சரிவினையொட்டி 20-30 புள்ளிகள் சரிவுடன் துவங்கும் நமது சந்தை 5200 நிலையினை எவ்வாறு கையாளுகிறது என்பதை பொறுத்தே நாளின் அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்.

இன்றைய சந்தையின் போக்கு 16.04.2010

கடந்த ஒரு வாரமாக சந்தையில் நிலவிவந்த ஒரு தேக்க நிலை நேற்றைய தினம் முடிவுக்கு வந்தது.

யாரும் எதிர்பாராத நேரத்தில் முக்கிய சப்போர்ட் நிலையினை உடைத்து கீழ் நோக்கிய பயணத்தை துவங்கியது.

அடுத்து ?  இப்பயணம் தொடருமா? 

தற்போதைய நிலையில் 5300 தடைநிலையாகவும் 5240 மற்றும் 5200 ஆகியவை சப்போர்ட் நிலையாகவும் இருக்கும்.

இன்றைய முக்கிய நிலைகள்

5292 -5310-5327-5345

5258-5240-5223-5206