//நிப்டியை பொறுத்தவரை வலுவான சப்போர்ட் நிலைகளான 5200 – 5160-5100 உடைபட்டால் 5010-4925 வரை கீழிறங்கலாம்.//
சென்ற வாரம் எதிர்பார்ப்புகளையொட்டியே நகர்வுகள் அமைந்தது.
கடந்த வியாழன் அன்று அம்பானி சகோதரர்களின் வழக்கின் முடிவை எதிர்பார்த்தே 5090 நிலையில் சந்தை முடிவுற்றது. ஆனால் அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட யாரும் எதிர்பாராத வீழ்ச்சி மற்றும் எழுச்சியை அடுத்து நமது சந்தையும் கேப்-டவுனாக துவங்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.
தற்போதைய நிலையில் அனைவரது எதிர்பார்ப்பும் பெரிய அளவிளான சரிவு… ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக சில ஆச்சரியங்கள் நடைபெறலாம்.
டெக்னிகல் பார்வையில் சந்தை பலவீனமான நிலையில் இருந்தாலும் – காளைகள் ஒரே நா ளில் தங்களது ஒரு வருடத்திற்கும் மேலான தொடர் ஓட்டத்தினை முடிவுக்கு கொண்டு வரமாட்டார்கள். இறுதியாக ஒரு பெரு முயற்சி எடுக்கலாம், மேல் நிலைகளை உடைக்க. பார்ப்போம்.
இன்றைய சப்போர்ட் நிலை – 4980
இந்த வாரத்திற்கான சப்போர்ட் நிலை – 4950 – 4920
இன்றைய தடை நிலை - 5075
இந்த வாரத்திற்கான தடை நிலை – 5150. இந்நிலை உடை பட்டால் 5260 வரை மேலே செல்லும் வாய்ப்புகள் உள்ளது.
