நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன் கதையாக தற்போது உலக சந்தைகளை பின் தொடர்கிறது நமது சந்தை. சென்ற மாதம் மட்டும் விதிவிலக்காக நாம் முன்னால் சென்றோம். புலி வருது புலி வருது கதையாக – அமெரிக்க சந்தைகளும் பெயில் அவுட் திட்டத்திற்கு காத்து கிடக்கின்றன. சாதரணமாக அங்கு நிலவும் ஏற்றம் இறக்கம் கூட இல்லாமல் 8000 நிலையில் உயிர் ஊசலாடுகிறது. ஆனால் Dow il கவனிக்க வேண்டிய ஒரு விசயம் 8000 நிலையை அக்டோபர் [...]
ஜனவரி, 2009 க்கான தொகுப்பு
30 Jan
திக்குமுக்காடிய உடுமலை மாணவன்
நேற்றைய பதிவில் பத்திரிக்கை செய்தியில் படித்ததாக நாம் குறிப்பிட்ட மாணவன் பிரபுவுக்கு கோவை டி.ஐ.ஜி திரு சிவனாண்டி உட்பட பலர் உதவியுள்ளனர். கடந்த 1 வருடத்திற்கும் மேலாக கடன் வழங்காமல் இழுத்தடித்த வங்கி நேரில் சென்று காசோலையை வழங்கியுள்ளனர்…. உதவி மழையில் திக்கு முக்காடும் மாணவனின் எதிர்காலம் இனி பிரகாசமாக அமையும்… வாழ்த்துவோம் நாமும். ஒருவரின் செயல்கள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் பலருக்கு தெரிய வந்தால் நிச்சயம் உதவி கிடைக்கும் என்பதற்கு இது உதாராணம். ஆகையால் மனம் தளராமல் [...]
29 Jan
இன்றைய சந்தையின் போக்கு 29.01.2009
உலக சந்தைகளை பின் தொடரும் நமது சந்தை…. அமெரிக்க சந்தையில் மையம் கொண்டுள்ள புயல் மேலும் 200 புள்ளிகள் வரை வடக்கு திசையில் முன்னேறி உள்ளது. அதன் காரணமாக உலக சந்தைகள் அனைத்திலும் லேசான அல்லது மிதமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. நமது சந்தையில் இந்த மழை வாய்ப்பை பெட்ரோல் பொருட்களின் விலை குறைப்பு அதிகரிக்க செய்யும். இரண்டொரு நாளில் ஒபாமா அரசின் 816$ பில்லியன் அளவிற்கான சலுகை திட்டங்கள் வெளிவரலாம் என்று எதிர் [...]
28 Jan
இன்றைய சந்தையின் போக்கு 28.01.2009
அமெரிக்க சந்தைகளில் மையம் கொண்டுள்ள புயல் வடக்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதே திசையில் நகர்ந்து கரையை கடந்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்… மாறாக தெற்கு நோக்கி நகர்ந்தால் உலக சந்தைகள் அனைத்தும் ஒரு வித அவதிக்குள்ளாகும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதிக வாய்ப்புகள் / எதிர் பார்ப்புகள் வடக்கு நோக்கி உள்ளது. ஐரோப்பிய நாடுகளும் சில சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கவும் / பொருளாதார சலுகைகள் வழங்கவும் முன் வந்துள்ளது. நேற்றைய தினம் எதிர் பார்த்ததை போலவே [...]
27 Jan
இன்றைய சந்தையின் போக்கு 27.01.2009
மூன்று நாட்கள் தொடர் விடுமுறைகளுக்கு பிறகு துவங்கும் சந்தை…. எவ்வாறு இருக்கும். இந்த 3 நாட்களில் உலக சந்தைகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. பெரிய அண்ணன் டவ் ஜோன்ஸ் 7900-8000-8100 என்ற நிலைகளில் புயல் சின்னம் போல நிலை கொண்டிருக்கிறார்.. என்றைக்கு கரையை கடக்கும் என்று தெரியவில்லை. 2 நாட்களாக ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஒரு வித உற்சாகம் காணப்படுகின்றது.. நமது சந்தையில் அதன் தாக்கம் துவக்கத்தில் இருக்கும். கடந்த சில மாதங்களில் பலவித [...]
23 Jan
இன்றைய சந்தையின் போக்கு 23.01.2009
நாம் எதிர் பார்த்ததை போலவே சந்தையின் எதிர்பார்ப்புக்கு மேலாக ரிலையன்ஸ் -ன் காலாண்டு முடிவுகள் அமைந்துள்ளன… ஆனால் சந்தையில் expectations என்ற பெயரில் எந்த அளவு வதந்திகளை பரப்ப முடியுமோ அந்த அளவுக்கு செய்து வைத்தார்கள்.. அதைவிட கொடுமை என்ன என்றால் நேற்று முன் தின இரவு ஒருவர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அடுத்த சத்யம் ரிலையண்ஸ் ஆம் சார், நாளைக்கு சார்ட் செல்லிங் செய்து வையுங்க டார்கெட் 30-40% ன்னார்… என்ன கொடுமை இதுன்னு நொந்து [...]
22 Jan
இன்றைய சந்தையின் போக்கு 22.01.2009
சத்ய -த்தின் சோதனைக்கு பிறகு சந்தையை.. வதந்திகள் தான் வழி நடத்துகின்றன என்றால் மிகையில்லை. தினவர்த்தகத்திற்கு குறிப்பாக சிறு வணிகர்களுக்கு ஏற்ற நிலையில் சந்தை இல்லை.. சந்தை எங்கும் செல்லாது.. நமது கையிருப்பை இழக்காமல் இருந்தால் நாமும் சந்தையில் இருக்கலாம் என்பதை உணர்ந்து சில நாட்களுக்கு ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பது நல்ல பயன் தரும். இன்று இழந்து விட்டு நல்ல வாய்ப்பு கிடைக்கும் போது தவற விட்டோமே என்று வருந்த கூடாது இல்லையா? நேற்றையதுவக்கம் சரியாக [...]
21 Jan
இன்றைய சந்தையின் போக்கு 21.01.2009
தவமாய் தவமிருந்து – அமெரிக்க அதிபராக பதவியேற்று விட்டார்… திரு பராக் ஒபாமா. மூன்று மாதங்களுக்கு முன்பே வெற்றி பெற்றிருந்தாலும்… பதவியேற்பு என்ற சம்பிரதாயம் நேற்று இனிதே நிறைவடைந்தது. அவர்களது சந்தைகளும் சிவப்பு கம்பளம் விரித்து அவரை வரவேற்றுள்ளன. ( ஆமா சம்பிரதாயத்தை மீறக்கூடாது இல்லையா?) இது வரை வாய்ச்சொல் வீரர் ஆக இருந்தவர் செயல் வீரர் ஆக மாற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல் மீடியா மற்றும் உலக நாடுகளின் “கறுப்பர்” என்ற அனுதாபத்தை இனி [...]
20 Jan
இன்றைய சந்தையின் போக்கு 20.01.2009
//தற்போது அவர் செல்ல வெண்டிய இடம் 2856. /// இப்படி நாம் சொன்னது 14.01.2009 அன்று. எதிர் பார்த்ததை போலவே நேற்றைய தினம் அதிக பட்சமாக 2858 வரை சென்று திரும்பி விட்டார். மீண்டும் 2820 களில் முடிவடைந்து உள்ளது. இன்று 2800 க்கு கீழ் நழுவினால் 2720 வரை செல்லலாம். அதன் தொடர்ச்சியாக ஒரு ஏற்றம் அமையும் என்று எதிர் பார்க்கிறேன். உலகமே ஒபாமாவின் பதவியேற்பை எதிர் பார்த்து இருக்கிறது… அதனால் பெரிய மாற்றம் நிகழுமா என்பது சந்தேகமே… அவர் [...]
19 Jan
இன்றைய சந்தையின் போக்கு 19.01.2009
கடந்த ஒரு வாரத்தில் கஜினி முகமது-வை போல் 5 முறை 2820 ஐ உடைத்து மேலே செல்ல முயற்சித்து உள்ளார்… நமது அண்ணன் நிப்டியார்… ஒவ்வொரு முறையும் 2821 -20 இல் பின் வாங்குகிறார். ஏன் இந்த பின் வாங்கல் என்று தான் தெரியவில்லை.. வெள்ளி கிழமை அன்றும் 2826 வரை சென்று 2816 இல் முடிவடைந்துள்ளார்.. பார்ப்போம் இன்று என்ன செய்கிறார் என்று. வெள்ளியன்று ரிலையன்ஸ் எதிர் பார்த்ததை போலவே அருமையாக ஆதரவளித்தது காளையின் ஆட்சிக்கு. [...]