நாம் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் எளிமையாக இருப்போம். நம் காந்தி தாத்தாவை போல் ஆனால் ஆடம்பரத்தில் திளைத்த அமெரிக்கவின் இன்றைய நிலை…
செப்டம்பர், 2008 க்கான தொகுப்பு
30 செப்
இந்திய பங்கு சந்தையின் போக்கு 30.09.2008
சோதனை தீர வில்லை சொல்லி அழ யாருமில்லை… இப்படிதான் உலக பங்கு சந்தைகள் அனைத்தும் பாடிகொண்டிருக்கின்றன… கூடவே மீடியா வேற புள்ளி விவரம் என்ற பெயரில் அலறுகின்றன.. சன் நீயூஸ்-ம் ஏனைய செய்தி தாள்களும் அலறுவதை பார்த்துவிட்டு, நம்ம வீட்டுக்கே பலர் நலம் விசாரிக்க வந்துவிட்டார்கள்… பங்கு சந்தையில் அடியாமே.. உன் வீட்டு காரர் எப்படி இருக்கார்.. பார்த்தும்மா அந்த மனுசனுக்கு புத்தி மதி சொல்லி, காசு சேர்த்து பொழைக்கிற வழியை பாரு என்று… இன்று குடிகாரனை கூட [...]
29 செப்
சந்தையின் போக்கு 29.09.2008
வெள்ளி கிழமை நமது எதிர்பார்ப்பிற்கு மாறாக அண்ணனின் போக்கு அமைந்தது… அதே நேரம் 4100க்கு கிழே சந்தை நழுவினால் மேலும் சரிவடையும், என்று சொல்லி வந்தது போலவே அமைந்தது. காரணம் திவாலான வங்கிகளை மீண்டும் திவான்களாக மாற்ற அமெரிக்க் அரசின் யோசனையான 700$ பில்லியன் பெயில் அவுட் பேக்கேஜ் பற்றிய சந்தேகம் எழுந்ததால் ஏற்பட்ட பதட்டம் உலக பங்கு சந்தைகள் அனைத்திலும் சரிவுகளை ஏற்படுத்தியது… அமெரிக்காவை தவிர. உணர்ச்சி வசப்படுவதில் பங்கு வணிகர்களிடம் பல குணசித்திர நடிகர்களே [...]
28 செப்
$700 பில்லியன் அனுமதி
நலிவடைந்த அமெரிக்க வங்கிகளை காப்பற்றும் முயற்சியாக $ 700 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதாவிற்கு அமெரிக்க பாரளுமன்றம் அனுமதி அளித்துள்ளது….. திங்கள் அன்று நமது சந்தை, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் இந்த Bailout மசோதா ஆகியவற்றிற்கு கிடைத்துள்ள ஒப்புதல் காரணமாக காளையின் ஆதிக்கத்தில் இருக்கும்.. உலக பங்குசந்தைகள் அனைத்தும் மிகுந்த எழுச்சியுடன் காணப்படும்…. thanks to bail out deal.
28 செப்
அமெரிக்க பாரளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றது இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம்
இன்று அதிகாலை இந்திய அணுசக்தி ஒப்பந்ததிற்கு அமெரிக்க பாரளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆதரவாக 298 ஓட்டுகளும் எதிராக 117 ஓட்டுகளும் பதிவாகியது. இதை அடுத்து செனட் சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் வாரம் இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க வெளியுறவு செயலர் (அமைச்சர்) கண்டலீசா ரைஸ் முன்னிலையில் இரு நாட்டு பிரதிநிதிகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று தெரிகிறது.
26 செப்
சந்தையின் போக்கு 26.09.2008
அனைவருக்கும் காலை வணக்கம், இன்று காலை 8 மணிக்கே இன்றைய பதிவினை வலையேற்றியும் 9.40 வரை Publish ஆக வில்லை, கரணம் தெரிய வில்லை. நன்றி. சாய்கணேஷ் வாரத்தின் இறுதி நாள்… சந்தையில் ஆடு புலி ஆட்டம் போன்று, கரடி காளை ஆட்டம் தான் தொடர்கிறது.. ஆறுதலனா விசயம் கடந்த ஜுன் மாத இறுதியில் இருந்து சந்தை 3900 க்கும் 4550 க்கும் இடையில் தான் ஊசலாடுகிறது.. பெரிய சாதக பாதகங்கள் எதுவும் இல்லை திறமை உள்ள தின [...]
25 செப்
சந்தையின் போக்கு – 25.09.2008
சந்தை மதில் மேல் பூனை நிலையில் தான் தொடருகிறது.. நேற்றைய கொந்தளிப்புகள் (மேடு பள்ளங்கள்) இன்றும் தொடரும்… அடுத்தடுத்து வரும் செய்திகளின் அடிப்படையில் தான் சந்தையின் ஏற்றம் மற்றும் மற்றும் சரிவுகள் உறுதி செய்யபடும்… ஏற்றங்களுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது ஆனால் அதற்கு 4300 இல் நிலை பட வேண்டும், 4050 க்கு கிழே செல்லும் பட்சத்தில் 3800 என்ற சப்போர்ட் வலுவிலக்கும் வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை… அதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது. அது மாதிரியான நிலை ஏற்பட்டால் ஷார்ட் [...]
24 செப்
சந்தையின் போக்கு 24.09.2008
நேற்றைய வர்த்தகத்தின் முடிவினை - டெக்னிகல் அடிப்படையிலும், F&O Expiry மற்றும் ஏனைய புறக்காரணங்களின் அடிப்படையிலும் ”மதில் மேல் பூனை” என்றே சொல்லலாம். 4050க்கும் – 4250 க்கும் சம வாய்ப்பை கொண்டுள்ளது. சூதாடி சித்தர்கள் என்றழைக்கபடும் பெரும் வணிகர்களின் நிலைகளை பொறுத்து சந்தையின் போக்கும் அமையும். நேற்றைய தினம் சொன்னதை போல் 4140 என்பது முக்கியமான நிலை அதற்கு கீழே செல்லும் பட்சத்தில் 4050 என்பது உறுதியாகும் அவ்வாறு இல்லாமல் 4160 -174 என்ற நிலைகளுக்கு மேலே சென்றால் 4222 மற்றும் 4250 சாத்திய மாகும். நான் [...]
23 செப்
Tips for Better Life from YOGA
Take a 10-30 minutes walk every day. And while you walk, smile. Sit in silence for at least 10 minutes each day. Sleep for 7 hours. Live with the 3 E’s — Energy, Enthusiasm, and Empathy. Play more games. Read more books than you did in 2007. Make time to practice meditation, yoga, and prayer. [...]
23 செப்
சந்தையின் போக்கு – 23.09.2008
நேற்றைய தினம் சந்தை நம் எதிர்பார்த்ததை போல் நகர்ந்தது.. சரிவுகள் நிதர்சனம் ஆன பிறகும் கீழே விழுந்தேன் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்காக தாங்கி பிடித்தார்கள். இன்னும் மேலே எடுத்து செல்ல, உலக சந்தைகளில் ஏதாவது ஒரு துருப்பு சீட்டு கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பில் தான். பங்காளி அமெரிக்கா லாபம் உறுதி செய்யும் பொறுட்டு 378 புள்ளிகள் சரிவடைந்துள்ளார். அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுனாமி தற்போதைக்கு ஓய போவதில்லை, இந்த நிலையை அடைய எவ்வளவு காலம் ஆனதோ அதே போல் [...]